

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புஜாரா, கோலி இருவருமே எதிர்பார்த்த அளவுக்கு ஆடமுடியவில்லை. இதன் காரணமாக டெஸ்ட் தரவரிசையில் இருவரும் மேலும் பின்னடைவு கண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவிலியர்ஸ் தொடர்ந்து முதல் இடத்திலும் சங்கக்காரா 2வது இடத்திலும் உள்ளனர். ஆம்லா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
8வது இடத்திலிருந்த செடேஷ்வர் புஜாரா 10வது இடத்திற்கும், விராட் கோலி 15வது இடத்திற்கும் பின்னடைவு கண்டனர்.
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 54 மற்றும் 52 ரன்களை எடுத்த ரஹானே 9 இடங்கள் முன்னேறி 26வது இடத்திற்கு வந்துள்ளார்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசை டாப் 10 பேட்ஸ்மென்கள்:
1. ஏ.பி. டிவிலியர்ஸ் - 899 புள்ளிகள்
2. குமார் சங்கக்காரா - 889 புள்ளிகள்
3. ஹஷிம் ஆம்லா - 878 புள்ளிகள்
4. டேவிட் வார்னர் - 871 புள்ளிகள்
5. சந்தர்பால் - 854 புள்ளிகள்
6. ஆஞ்சேலோ மேத்யூஸ் - 827 புள்ளிகள்
7. மிஸ்பா உல் ஹக் - 824 புள்ளிகள்
8. மைக்கேல் கிளார்க் - 818 புள்ளிகள்
9. ராஸ் டெய்லர் - நியூசிலாந்து - 795 புள்ளிகள்
10. செடேஷ்வர் புஜாரா - 771 புள்ளிகள்