Published : 18 Jun 2018 09:49 AM
Last Updated : 18 Jun 2018 09:49 AM

ஆஸ்திரேலியா மீண்டும் தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கார்டிப் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஜேசன் ராய் 120, ஜாஸ் பட்லர் 81 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 304 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. ஷான் மார்ஷ் 131, அஷ்டன் அகர் 46 ரன்கள் எடுத்தனர். லயிம் பிளங்கெட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x