

ஓடன்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென், மாளவிகா பன்சோத் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லியு குவாங் ஸுவுடன் மோதினார். இதில் லக்சயா சென் 21-12,19-21,14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 70 நிமிடங்கள் நடைபெற்றது.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் நுயென் துய் லின்னுடன் மோதினார். இதில் மாளவிகா 13-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருது அபர்னா-சுவேதா அபர்னா ஜோடி 18-21, 22-24 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஷாங் ஷிங் ஹி-யங் ஷிங் துன் ஜோடியிடம் வீழ்ந்தது.