Published : 05 Jun 2018 02:37 PM
Last Updated : 05 Jun 2018 02:37 PM

ஆண்டர்சன் இருக்கும் ஃபார்மிற்கு விராட் கோலி கஷ்டம்தான்: கிளென் மெக்ரா

2014-ல் இங்கிலாந்தில் ஆடிய கோலி இப்போது இல்லை என்றாலும் பார்மில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் விராட் கோலிக்குக் குடைச்சலைக் கொடுப்பார் என்று ஆஸி. கிரேட் கிளென் மெக்ரா அபிப்ராயப்படுகிறார்.

இது தொடர்பாக கிளென் மெக்ரா கூறும்போது, “கோலி தற்போது கொஞ்சம் அனுபவமிக்க வீரர். தரமான வீரர், இதைப்பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகள் எப்போதும் கடினம். அதுவும் ஜிம்மி ஆண்டர்சன் இருக்கும்போது, நன்றாக வீசும்போது நிச்சயம் இது கடினமான வேலையாகவே இருக்கும்.

கடினமாக உழைத்து ஆட தயாராக வேண்டும், எனவே இந்த ஒரு சவாலுக்காக நான் காத்திருக்கிறேன்.

எந்த ஒரு அணியும் அதன் சிறந்த பேட்ஸ்மென் நன்றாக ஆட வேண்டும் என்றே விரும்பும். கோலி சரியாக ஆடவில்லையெனில் அது மற்ற பேட்ஸ்மென்களுக்கு நல்ல வாய்ப்பு, சில தரமான பேட்ஸ்மென்களும் இந்திய அணியில் இருக்கின்றனர். ஒரேயொரு வீரரை மட்டும் நம்பியிருந்தால் அவர்கள் தவறான திசையில் செல்வதாக அர்த்தம்.

புஜாரா கவுண்ட்டியில் அதிக ரன்கள் எடுக்காவிட்டாலும் இந்த சூழ்நிலையில் இருந்து அதற்குத் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளார், இது அவருக்கு உதவும்.

ஆனால் இந்தியப் பந்து வீச்சு சிறபாக உள்ளது, குறிப்பாக புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரிடம் நல்ல கட்டுக்கோப்பு உள்ளது. டியூக்ஸ் பந்துகளின் தையல் கொஞ்சம் அகலமானது. எனவே நல்ல இடங்களில் பந்துகளை பிட்ச் செய்தால் விக்கெட்டுகளை அறுவடை செய்யலாம்.

நாங்கள் ஆடும்போது டூர் மேட்ச் இருக்கும், அது உதவும், ஆனால் இப்போதெல்லாம் நேரடியாக டெஸ்ட் மேட்ச்களில் இறங்குகின்றனர், அதனால் கடந்தகால ஆட்ட அனுபவங்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே தகவமைத்துக் கொள்வதுதான் முக்கியம்” என்றார் கிளென் மெக்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x