

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அதில் பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த வீடியோவில் கோலி, ”நண்பர்களே! என்னுடம் யார் உள்ளார் என்று பாருங்கள்... ஒரு தலைவனைப் போல அனுஷ்கா சர்மா உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டது நினைவுகூரத்தக்கது.