

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் புதிய தலைமுடி அலங்காரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடி வருகிறார் தோனி. இந்நிலையில் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அன்கேப்டு பிளேயர் விதிமுறைப்படி சிஎஸ்கே அணிக்காக தோனி களமிறங்கவுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எம்.எஸ்.தோனியின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த தோனி, நேற்று வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் இளமைத் தோற்றத்துடனும் புதிய தலைமுடி அலங்காரத்துடனும் காணப்படுகிறார். சமூக வலைதளங்களில் வெளியான இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. தோனி ரசிகர்கள் இந்த புகைப்படங்களை லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.