சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் வங்கதேச வீரர் மஹ்மதுல்லா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் வங்கதேச வீரர் மஹ்மதுல்லா
Updated on
1 min read

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மஹ்மதுல்லா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக வரும் சனிக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெறும் 3-வது போட்டியே தனது கடைசி டி20 சர்வதேச ஆட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

38 வயதான மஹ்மதுல்லா கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகமானார். வங்கதேச அணிக்காக 139 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 8 அரை சதங்களுடன் 2,395 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மஹ்மதுல்லா தற்போது டி20 போட்டியில் இருந்தும் விடைபெற முடிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in