மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கை அணியை வீழ்த்தியது ஆஸி.

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கை அணியை வீழ்த்தியது ஆஸி.
Updated on
1 min read

ஷார்ஜா: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று ‘ஏ’ பிரிவில் ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இலங்கையுடன் மோதியது.

முதலில் பேட் செய்த இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக நிலக் ஷிகா சில்வா 29, ஹர்ஷிதா சமரவிக்ரமா 23 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகன் ஷுட் 3விக்கெட்களை வீழ்த்தினார். 94 ரன்கள் இலக்குடன் பேட்செய்த ஆஸ்திரேலிய அணிமகளிர் அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனையான பெத் மூனி 38 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in