விளையாட்டு பல்கலை. 14-வது பட்டமளிப்பு விழா: 3,638 மாணவர்களுக்கு பட்டம்

விளையாட்டு பல்கலை. 14-வது பட்டமளிப்பு விழா: 3,638 மாணவர்களுக்கு பட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்கள் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக இணைவேந்தரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக அளவில் உடற்கல்வி, விளையாட்டுபயிற்சி விளை யாட்டு மேலாண்மை உள்ளிட்ட பல் வேறு பாடங்களில் சிறப்பிடம் பெற்ற 37 மாணவ, மாணவி களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் மொத்தம் 3,638 பேருக்கு பட்டம் வழங்கப் பட்டது. அவர்களில் 37 பேர் பிஎச்டி பட்டதாரிகள். இந்திய கூடைப் பந்து அணியின் முன்னாள் கேப் னும் பத்மஸ்ரீ விருது பெற்றவரு மான அனிதா பால்துரை கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

அவர் பேசும்போது, "பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது உடற்கல்வி ஆசிரியர்தான் என் னிடம் இருந்த விளையாட்டு திற மையை கண்டறிந்து என்னை கூடைப்பந்து வீராங்கனையாக உருவாக்கினர். வாழ்க்கையில் வெற்றிபெற இலக்கு. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவை மிகவும் அவசியம்" என்றார்.

முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.சுந்தர் வர வேற்று ஆண்டறிக்கை சமர்ப் பித்தார். விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, பல் கலைக்கழக பதிவாளர் ஐ.லில்லி புஷ்பம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், வி.முருகவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in