அண்ணா பல்கலைக்கழக மண்டல போட்டி: மகளிர் வாலிபால், கூடைப்பந்தில் ஆர்எம்டி கல்லூரி அணி சாம்பியன்

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்எம்டி கல்லூரி அணியினர்.
அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்எம்டி கல்லூரி அணியினர்.
Updated on
1 min read

சென்னை: கவரைப்பேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி - ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் ஆர்எம்டி கல்லூரி அணி 15-25, 25-16, 25-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இதேபோன்று மகளிருக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி அணியும், வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணியும் விளையாடின. இதில் ஆர்எம்டி கல்லூரி அணி 30-14 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் கிஷோர் பரிசுகளை வழங்கினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in