Published : 08 Jun 2018 05:41 PM
Last Updated : 08 Jun 2018 05:41 PM

விராட் கோலியின் காது போச்சு... - பவுன்சர் காரணமல்ல

டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது.

விராட் கோலியின் மெழுகுச்சிலையை அங்கு வைத்துதான்... உடனே ரசிகர்கள் அங்கு வந்து புகைப்படங்களையும் செல்ஃபிக்களையும் கிளிக்கிவிட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர்.

ரசிகர்கள் விராட் கோலி சிலை மீது மொய்த்து புகைப்பட வெறிகொண்டு அலைய, இது அவரது சிலையின் காதுப்பகுதியை லேசாகக் காலி செய்துள்ளது.

இது குறித்து மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியக அதிகாரி கூறும்போது, “தற்போது மெழுகுச்சிலை சரிசெய்யப்பட்டுவிட்டது. கோலி சிலையின் காதில் சேதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மீண்டும் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

விராட் கோலியின் மெழுகுக் காதைக் கடித்தவர் யார் என்று விசாரணையெல்லாம் இல்லை, சரி செய்து விட்டனர் அவ்வளவே. விராட் கோலி சார்ந்த டெல்லிவாசிகள்தான் அவரது மெழுகுக் காதைக் காலி செய்தனரோ என்ற ஐயமும் ஒரு புறம் உள்ளது.

எது எப்படியானாலும் மெழுகுச்சிலைக் காது சேதமடைந்தது பரவாயில்லை, இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது உண்மையான காதை பவுன்சரில் காலி செய்யாமல் இருந்தால் சரி!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x