செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகள் வெற்றி

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகள் வெற்றி
Updated on
1 min read

நார்வேயின் டிராம்சோ நகரில் நடைபெற்று வரும் 41-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 5-வது சுற்றில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெற்றி கண்டுள்ளன.

முன்னதாக 4-வது சுற்றில் தோல்வி கண்டிருந்த இந்திய அணிகள், இப்போது 5-வது சுற்றில் வெற்றி கண்டு சரிவிலிருந்து மீண்டுள்ளன. 5-வது சுற்றில் இந்திய ஆடவர் அணி, மான்டீனிகுரோவையும், இந்திய மகளிர் அணி, ஆஸ்திரியாவையும் தோற்கடித்தன. தற்போதைய நிலையில் ஆடவர் அணி 25-வது இடத்திலும், மகளிர் அணி 19-வது இடத்திலும் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in