

புதுடெல்லி: நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒருகிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொண்டதொடர் வரும் 9-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவிளையாட்டு வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி வீரர்கள் நேற்று நெய்டா வந்து சேர்ந்தனர்.
நியூஸிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி தலைமையில் களமிறங்குகிறது. முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், அஜாஸ் படேல்ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சென்று அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக உள்ளது. இலங்கை தொடர் முடிவடைந்ததும் நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.