

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவில் நடந்துக் கொண்டிருக்கிறது.
இதன் ஒவ்வொரு போட்டியிலும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. அந்த நிகழ்வுகள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகவும் தவறுவதில்லை.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை, மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அணியின் ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாக பரவியது. போலாந்து உடனாக நேற்று நடந்தப் போட்டியில் செனகல் அனி 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் பயிற்சியாளரின் வெற்றிக் கொண்டாட்டமும், கோல் அடித்த பின்னர் அந்த அணியின் வீர்ரகள் ஆடிய நடனமும் வைரலாக இணையத்தில் ஒருபக்கம் பரவிக் கொண்டிருக்க, செனகல் அணியின் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க தவறவில்லை.
இவர்கள் சுத்தம் செய்யும் வீடியோதான் தற்போது வலைதளங்களில் வைரலாக பரப்பட்டுள்ளது. இவர்கள் இந்தச் செயலை பல தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
செனகல் அணி மட்டுமல்லாது கொலம்பியாவுனா போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற ஜப்பான் அணியின் ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்ததும் பாராட்டை பெற்றுள்ளது.