

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு குழுவின் தலைவர் ராஜ் சிங்கிற்கு பிரணாப் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நம்முடைய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகள். எதிர்காலத்தில் நம்முடைய வீரர், வீராங்கனைகள்
சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.