

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் தொடங்கும் ஆட்டத்தில் மும்பை - டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய டி 20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர், டெஸ்ட் அணியின் சர்பராஸ் கான் ஆகியோர் மும்பை அணிக்காக களமிறங்க உள்ளனர். இதனால் இந்த ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செப்டம்பர் 5-ம் தேதி துலீப் டிராபி தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாகவே சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சர்பராஸ் கான் ஆகியோர் தற்போது புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்கின்றனர். புச்சிபாபு தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தை ஹரியானாவுக்கு எதிராக டிரா செய்திருந்தன.