Published : 31 May 2018 03:02 PM
Last Updated : 31 May 2018 03:02 PM

376 ரன்கள் மகாவிரட்டலில் வருண் ஆரோன் பந்துவீச்சை புரட்டி எடுத்த வொர்ஸ்டர் ஷயர்

ராயல் லண்டன் ஒன் டே கப் ஒருநாள் போட்டியில் லீசெஸ்டர் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் கவுண்ட்டி போட்டி ஒன்றில் லீசெஸ்டர் 376 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய வொர்ஸ்டர் ஷயர் அணியில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கால்லம் ஃபெர்கூசன் வெளுத்துக் கட்டினார். 143 பந்துகளில் 21 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 192 ரன்கள் விளாச, ஜேஎம் கிளார்க், மிட்செல், ஒலிவெய்ரா ஆகியோரும் அரைசதங்கள் விளாச 47.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வொர்ஸ்டர் ஷயர் அணி 380 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதில் லீஷயர் அணியின் பிரதான ஸ்ட்ரைக் பவுலரான இந்தியாவின் வருண் ஆரோன் 10 ஓவர்களில் 84 ரன்கள் விளாசித்தள்ளப்பட்டார்.

வருண் ஆரோன் வீசிய 3வது ஓவரில் கால்லம் ஃபெர்கூசன் 3 பவுண்டரிகளையும் 2 ரன்களையும் எடுக்க 14 ரன்கள் கொடுத்தார். 3 ஓவர்கள் 23 ரன்களில் ஆரோனை பவுலிங்கிலிருந்து அகற்றினர். மீண்டும் 31வது ஓவரில் ஆரோன் வீச அழைக்கப்பட்ட போது அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்களைக் கொடுத்து 4 ஓவர் 32 என்று அதிக ரன்களைக் கொடுத்திருந்தார். பிறகு 2 ஓவரை டைட்டாக வீச 6 ஓவர்களில் 36 ரன்கள் என்று இருந்தார் ஆரோன். ஆனால் மீண்டும் 37வது ஓவரில் கால்லம் ஃபெர்கூசன் ஒரு சிக்ஸ், பவுண்டரியுடன் 16 ரன்கள் விளாசினார்.

பிறகு 8 ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்த ஆரோன் வொர்ஸ்டர் ஷயர் வெற்றிக்கு 24 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் டி’ஆலிவெய்ராவின் பேட் செய்த போது 47வது ஓவரில் 4 பவுண்டரிகள், நோ-பாலுடன் 21 ரன்களை விட்டுக் கொடுக்க, கடைசியில் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கும் வாய்ப்பும் போய் 47வது ஓவரிலேயே 376 என்ற மகா இலக்கு சமன் ஆனது, பிறகு 48வது ஓவரி வொர்ஸ்டர் ஷயர் வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் வருண் ஆரோனின் பந்து வீச்சு ஸ்ட்ரைக் ரேட் 34.5, சராசரி 38.09, சிக்கன விகிதம் 6.11 என்பது குறிப்பிடத்தக்கது. டி20யில் இவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 8.4 ரன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x