

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
மகளிருக்கான போட்டி வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையும், ஆடவருக்கான போட்டிகள் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தை அணுகலாம். தொடரில் கலந்து கொள்ளும் அணிகள் வரும் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.