வினேஷ் போகத் தகுதி நீக்கம்: முழு விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: முழு விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்
Updated on
1 min read

புது டெல்லி: “பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்குப் பின்னால் உள்ள நுட்பமான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் வெளிவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஆனால், இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது பதக்கக் கனவு முற்றிலும் தகர்ந்தது. | முழு விவரம் > வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in