நடக்கவே முடியாத நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி: வீடியோ வைரல்

நடக்கவே முடியாத நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி: வீடியோ வைரல்
Updated on
1 min read

மும்பை: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி, நடக்கவே முடியாமல் சிரமப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருக்கும் இருசக்கர வாகனம் ஒன்றை கையால் பிடித்தப்படி நிற்கும் காம்ப்ளி, நடக்கவே முடியாமல் மிகவும் தடுமாறும் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருடைய இந்த நிலை குறித்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். முன்னதாக 2012ஆம் ஆண்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால நண்பர். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். 52 வயதாகும் காம்ப்ளி தன்னுடைய மிகச்சிறந்த பேட்டிங் நுட்பங்களுக்காக இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார். மேலும் முதல் தர கிரிக்கெட்டில், ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக 262 ரன்களுடன் கிட்டத்தட்ட 10,000 ரன்களைக் குவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in