பாலியல் புகார்: கிளாஸ்கோவில் இந்திய மல்யுத்த நடுவர் கைது

பாலியல் புகார்: கிளாஸ்கோவில் இந்திய மல்யுத்த நடுவர் கைது
Updated on
1 min read

காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில், வலுவான பாலியல் புகார் ஒன்றில், இந்திய மல்யுத்த போட்டி நடுவர் விரேந்தர் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய புகாரில், இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விரு கைது நடவடிக்கைகள் குறித்தும் காமன்வெல்த் போட்டி அமைப்பு அதிகாரிகள் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டதாக, ஸ்காட்லாந்த் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 மற்றும் 49 வயது ஆன இரண்டு ஆண் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்காட்லாந்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள் இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் தங்கியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் உள்ளூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in