Published : 31 May 2018 04:05 PM
Last Updated : 31 May 2018 04:05 PM

950 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.. எங்களுக்குத் தெரியாதா?- மைக்கேல் வானுக்கு ஆண்டர்சன் பதிலடி

லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆண்டர்சன் அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினார், பிராட் 1 விக்கெட்டைத்தான் கைப்பற்றினார்.

இதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரிலும் கூட இருவருக்கும் வயதாகி விட்டது, வேகம் குறைந்து விட்டது, ஸ்விங் போய்விட்டது என்று இருவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் அந்தத் தொடரில் இவர்கள்தான் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட் தோல்வி இங்கிலாந்து ஓய்வறையை ஆட்டிப்படைத்துள்ளது.

இதனையடுத்து விமர்சனங்கள் இருவர் மீதும் விழுந்தன.

இந்நிலையில் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டர்சன் கூறியதாவது:

“பாகிஸ்தான் எந்த லெந்தில் வீசினார்கள் என்பதைப் பார்த்தோம், பிறகு இந்தப் பிட்சில் எந்த லெந்த் சரிப்பட்டு வரும் என்று யோசித்துதான் முடிவெடுத்து வீசினோம். விமர்சனங்களை நான் தடுத்தாட்கொள்வேன்.

சிலர் என்னைவிட தங்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 15 ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவத்தில் எனக்கு எந்த பிட்சில் எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டு என்று நன்றாகவே தெரியும்.

நானும் பிராடும் சேர்ந்து 950 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் கொஞ்சம் பார்மில் பின்னடைவு கண்டுள்ளோம் என்பது உண்மைதான். இத்தகைய சூழல்களில் மேட்ச் வின்னிங் ஆட்டத்திறன் கொண்ட வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.

2வது டெஸ்ட் போட்டிக்கு அணி தன்னம்பிக்கைக் குறைவாகவே செல்கிறது. ஆனால் நாட்டில் உள்ள வீரர்களில் சிறந்த 12 வீர்ர்கள்தான் அணியில் உள்ளனர்.

என்று மைக்கேல் வான் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x