மகளிர் ஆசிய கோப்பை: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை சாம்பியன்!

மகளிர் ஆசிய கோப்பை: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை சாம்பியன்!
Updated on
1 min read

தம்புலா: நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இலங்கையின் தம்புலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் விஷ்மி குணரத்னே ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் ஹர்ஷிதா மற்றும் கேப்டன் சமரி அத்தப்பத்து இணைந்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சமரி அத்தப்பத்து, 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது 12 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.

சிறப்பாக ஆடிய ஹர்ஷிதாவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் கவிஷா விளையாடி இருந்தார். இறுதியில் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை அணி இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது. ஹர்ஷிதா 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கவிஷா 30 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. கேட்ச்களை டிராப் செய்தது பாதகமாக அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in