காமன்வெல்த் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா

காமன்வெல்த் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா
Updated on
1 min read

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது இந்தியா.

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதியில் 2 கோல்கள் பின் தங்கியிருந்த இந்தியா பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது.

நியூசிலாந்து அணியில் சைமன் சைல்ட், நிக் ஹெய்க் ஆகியோர் முதலில் கோல் அடித்து 2-0 என்று முன்னிலை கொடுத்தனர்.

அதன் பிறகு இந்தியா ஆவேசமாக ஆடியது. ஆகாஷ்தீப் சிங், ரமந்தீப் சிங், மற்றும் ருபிந்தர்பால் சிங் ஆகியோர் 3 கோல்களை அடிக்க நியூசிலாந்து அதிர்ச்சியடைந்தது.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 4-1 என்று ஊதித்தள்ளி இறுதிக்குள் நுழைந்தது. நாளை இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

கேப்டன் சர்தார் சிங் இல்லாமலேயே இந்தியா சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. சர்தார் சிங் இந்தப் போட்டிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in