‘ஷாக்ஸியிடம் சொல்லாதீர்கள்’: தோனி உடைத்த ஜாலி ரகசியம்

‘ஷாக்ஸியிடம் சொல்லாதீர்கள்’: தோனி உடைத்த ஜாலி ரகசியம்
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் மகேந்திர சிங் தோனி தனது முதல் காதல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீர்ர்கள் மற்றும் அதன் தலைவர் தோனி பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

 இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தோனி தனது முதல் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

முதல் காதல் குறித்த கேள்விக்கு தோனி, "அவரின் பெயரில் A இருக்கும்... A அவரது பெயரில் மூன்றாவதாக இடப்பெற்றிருக்கும்.... ஆமாம் அவரது பெயர் சுவாதி எனது மனையிடம் இதை பற்றி கூறிவீடாதீர்கள். நான் அவரை  கடைசியாக பார்த்தது எனது 12 ஆம் வகுப்பில்” என்று கூறி இருக்கிறார்.

தோனியுடன் ஷேன் வாட்சன், ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் உடனிருந்தனர்.

வரும் வெள்ளிக்கிழமை அணி ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெரும் பட்சத்தில் தனது பிளேப் ஆஃப் சுற்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்யக் கூடும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in