Published : 05 Jul 2024 08:02 AM
Last Updated : 05 Jul 2024 08:02 AM
சென்னை: தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய மகளிர் அணி அடுத்ததாக ஆசிய கோப்பை மற்றம் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இதற்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடர் சிறந்த பயிற்சியாக அமையக்கூடும்.
ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. அதேவேளையில் டி 20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 4-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த இரு தொடர்களுக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடராக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 ஆட்டங்கள் அமைந்துள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்க அணி டி 20 தொடரில் சிறப்பாக விளையாட முயற்சிக்கக்கூடும்.
இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரேணுகா சிங், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா, ராதா யாதவ், ஆஷா சோபனா, ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT