Last Updated : 08 May, 2018 03:36 PM

 

Published : 08 May 2018 03:36 PM
Last Updated : 08 May 2018 03:36 PM

ஆஸி.ஒருநாள் அணிக்கும் டிம் பெய்ன் கேப்டன்; டி20 அணிக்கு ஏரோன் பிஞ்ச் தலைமை: இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு

அடுத்த மாத இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் அணிக்கும் டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், டி20 அணிக்கு ஏரோன் பிஞ்ச் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பால் டேம்பரிங் விவகாரத்தில் சரிந்த ஆஸ்திரேலிய செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், டிம் பெய்னை ஒருநாள் அணி கேப்டனாக நியமித்தார். பயிற்சியாளராக அவர் எடுக்கும் முதல் முக்கிய முடிவாகும் இது.

ஸ்டீவ் ஸ்மித் ஓராண்டு தடை பெற்ற பிறகு டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க தொடரில் வாங்கிய உதை, மற்றும் சச்சரவுகளுக்குப் பிறகு புதிய ஆஸ்திரேலிய அணியாக அடுத்த மாதம் இங்கிலாந்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது ஆஸ்திரேலியா. ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் ஏரோன் பிஞ்ச் செயல்படுவார்.

தேர்வுக்குழு தலைவர் ட்ரவர் ஹான்ஸ் கூறுகையில், “டிம் பெய்ம் ஒரு வலுமிக்க தலைவர், அவருக்கு உறுதுணையாக ஏரோன் பிஞ்ச் செயல்படுவார். இதற்குப் பிறகு நிரந்தர ஒருநாள் அணி கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.

ஆஸ்திரேலியா லார்ட்ஸில் ஜூன் 13 அன்று இங்கிலாந்தை முதல் போட்டியில் சந்திக்கிறது.

14 வீரர்கள் கொண்ட ஒரேயொரு டி20 போட்டிக்கான அணியையும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது, இதற்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கிய முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியா ஆடுகிறது.

டி20 அணிக்கு பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட துணை கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: டிம் பெய்ன் (கேப்டன்), ஏரோன் பிஞ்ச் (துணைக் கேப்டன்), ஆஷ்டம் ஆகர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், நேதன் லயன், கிளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி ஆர்க்கி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை.

டி20 அணி: ஏரோன் பிஞ்ச் (கேப்டன்) அலெக்ஸ் கேரி (துணை கேப்டன்). ஆஷ்டன் ஆகர், ட்ராவிஸ் ஹெட், நிக் மேடிசன், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி ஆர்க்கி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, ஜேக் வில்டர்முத்

மேலும் படிக்க...

மேஜிக்கல் முஜீப்: அசத்தும் 17 வயது ஆப்கான் லெக் ஸ்பின்னர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x