‘Team India Hai Hum’ - டி20 சாம்பியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அர்ப்பணித்த பாடல்!

இந்திய அணி | உள்படம்: ஏ.ஆர்.ரஹ்மான்
இந்திய அணி | உள்படம்: ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

சென்னை: கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாணியில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக பிரத்யேக வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இசையில் வெளிவந்த ‘மைதான்’ படத்தில் இடம்பெற்ற ‘Team India Hai Hum’ என்ற பாடலை தனது குழுவினருடன் இணைந்து பாடி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த பாடல் சுமார் 3.37 நிமிடங்கள் கொண்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவினர் முழு உற்சாகத்துடன் பாடி அசத்தியுள்ளனர். இது தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்திய அணி கடந்த 2007-க்கு பிறகு தற்போது தான் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதோடு ஐசிசி நடத்தும் தொடரிலும் கடந்த 2013-க்கு பிறகு இப்போது தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கபில் தேவ், தோனி வழியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டனாக ரோகித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in