

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.
“நம் அணி அவர்களது ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறோம். இது வரலாற்று சிறப்பு மிக்கது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார். தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றார். அவர் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடைசியாக கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் 11 ஆண்டுகால காத்திருப்புக்கு விடை கொடுத்துள்ளது.