

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தமின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப்படம் வெளியாகியிருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார்.
சுமார் 3,10,000 பேர் இயன் போத்தமின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டு அவர் அதிர்ந்து போனார்.
முன்னாள் வெல்ஷ் அணியின் கால்பந்து வீரர் ராபி சேவேஜ், போத்தம் டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதை அவருக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து போத்தம் உடனடியாக டிவீட் செய்ததாவது: நான் எனது கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன், சில விஷமிகள் இங்கு வருகை தந்துள்ளனர்.
ஆனாலும் ஹேக்கருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தப் புகைப்படத்தினால் 20 நிமிடங்களில் 500 ஹிட்கள் கிடைத்தது. 25 நிமிடங்களில் ஹிட்டை 700ஆக உயர்த்தி விடுங்கள்” என்று நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார் இயன் போத்தம்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நீண்ட நாளைய சாதனைக்குரியவர் இயன் போத்தம். இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் இவரது சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் உள்ளார்.