கோப்புப்படம்
கோப்புப்படம்

“ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்” - சேவாக் | T20 WC

Published on

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் நாளை (ஜூன் 27) இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் இதுவரை டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை. இந்த முறை இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது:

“கடந்த 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரை சச்சின் டெண்டுல்கருக்காக நாங்கள் வென்றிருந்தோம். அது போல டி20 உலகக் கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி ராகுல் திராவிடுக்காக வெல்ல வேண்டும். பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்றவர் என்ற அடையாளத்தை திராவிட் பெற வேண்டும். வீரராக அந்த பட்டத்தை அவர் வெல்லவில்லை. அவர் அதற்கு தகுதியானவர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கேப்டன் ரோகித் சர்மா பவர் பிளே ஓவர்கள் வரை மட்டுமே களத்தில் பேட் செய்வார் என்ற நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அதையும் கடந்து பேட் செய்தார். அதோடு நம் மனங்களை தனது ஆட்டத்தின் மூலம் மகிழ்வித்தார். அதுவே இந்த உலகக் கோப்பை தொடரின் சிறந்த தருணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in