வலைப்பயிற்சிக்கு தோனி வராதது ஏன்?

வலைப்பயிற்சிக்கு  தோனி வராதது ஏன்?
Updated on
1 min read

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி 3வது நாளில் முடிந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் 2 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் நேற்று இந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பொது கேப்டன் தோனி வரவில்லை.

தோனிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்குமோ அதனால்தான் அவர் வலைப்பயிற்சியைக் கைவிட்டாரோ என்று பலரும் பல ஊகங்களுக்குச் சென்றதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் தோனிக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. அப்படிக் காயமடைந்து 5வது டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத நிலை இருந்தால் பதிலி விக்கெட் கீப்பர் நமன் ஓஜா பயிற்சியில் ஈடுபட்டிருப்பார். ஆனால் நமன் ஓஜா பயிற்சியில் இல்லை.

துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்குச் சென்று 'இலக்கு பயிற்சி' எடுத்து கொண்டார் தோனி என்று ஏஜென்சி செய்திகள் சில தெரிவித்துள்ளன.

இது மட்டுமல்ல 4வது டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் வீரர்கள் சிலர் இந்த பயிற்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

நேற்று ஓவல் மைதானத்தில் வலைப்பயிற்சியில் அஸ்வின் முதலில் களமிறங்கி நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார்.

இஷாந்த் சர்மா காயத்திலிருந்து மீண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவர் நன்றாக ஓடி வந்து முழு வேகத்தில் பந்து வீசினார். அதேபோல் ரவீந்திர ஜடேஜா மீதான விமர்சனம் அதிகரித்துள்ளதால் ஸ்டூவர்ட் பின்னி களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

கம்பீருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தவான், ரோகித் சர்மா ஆகியோருக்கு வலைப்பயிற்சியில் அவ்வளவாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் கம்பீர், விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, அஸ்வின், பின்னி/ஜடேஜா, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், புவனேஷ் குமார் என்று அணிச் சேர்க்கை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாளை 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில்தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in