Published : 25 Apr 2018 08:49 AM
Last Updated : 25 Apr 2018 08:49 AM

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் ரிஸ்வி

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் ரிஸ்வி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தென்கொரியாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரிஸ்வி 239.8 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ரஷ்யாவின் ஆர்ட்டெம் செர்வோவ்சோவ் 240 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். 0.2 புள்ளிகள் வித்தியாசத்தில் ரிஸ்வி தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். பல்கேரியாவின் சாமுய் டான்கோவ் 217.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்தத் தொடரில் முதல் இரண்டு நாட்களில் இந்தியா தரப்பில் எந்தவித பதக்கமும் வெல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிது ராய், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகியோர் ஏமாற்றம் அளித்திருந்தனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x