பிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்று: இந்தியா - குவைத் இன்று மோதல்

பிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்று: இந்தியா - குவைத் இன்று மோதல்
Updated on
1 min read

கொல்கத்தா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்துதொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுகிறார். தகுதி சுற்று தொடரில் இந்திய அணி இறுதிக்கட்ட நிலைக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

19 வருட கால்பந்து வாழ்க்கையில் இருந்து இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெற உள்ள 39 வயதான சுனில் சேத்ரி, வெற்றியுடன் விடைபெறுவதிலும் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னேறச் செய்வதிலும் கூடுதல் முனைப்பு காட்டக்கூடும். தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. கத்தார் 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குவைத் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரே புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியை வரும் 11-ம் தேதிஎதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவது என்பது கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று குவைத்தை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சினை இருக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in