

லண்டன்: வரும் ஞாயிற்றுக்கிழமை டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகளில் இந்தியா வலுவானது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.
“இந்த தொடரில் இந்தியா வலுவான அணியாக இருக்கும். எனது ஃபேவரைட் இந்திய அணி தான். ஆன் பேப்பரில் உள்ள தரத்தை களத்தில் அப்படியே வெளிப்படுத்தினால் நிச்சயம் எத்தகைய அணியையும் அவர்கள் வெல்வார்கள்.
பலரும் 15 வீரர்கள் அடங்கிய உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் குறித்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ஷுப்மன் கில்லை அணியில் சேர்த்து இருக்கலாம். அவருடன் நான் விளையாடி உள்ளேன். அவர் எப்படி செயல்படுவார் என்பதை நான் அறிவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. மொத்தம் 55 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.