

ஐபிஎல் பாணியிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 7 ஆட்டங்கள் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கேரள கால்பந்து சங்கத்தின் தலைவர் கே.ஐ.எம்.மாதேர் கூறுகையில், “முதல் போட்டி அக்டோபர் 15-ம் தேதியும், எஞ்சிய 6 போட்டிகள் அக்டோபர் 26, நவம்பர் 4, 7, 12, 23, 30 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறுகின்றன.
இங்குள்ள அம்பேத்கர் மைதானம் செயற்கை இழையுடன் கூடிய சர்வதேச தரம் வாய்ந்த மைதானமாக மாற்றப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் இன்னும் 5 மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும்” என்றார்.
இந்த போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., வடகிழக்கு யுனைடெட் எப்.சி., டீம் புணே, டீம் மும்பை, டீம் கோவா, டீம் பெங்களூர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.