

பாங்காங்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது சீன தைபேவின் மிங் சே லூ, டாங் காய் வேய் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி சீனாவின் ஷென் போ யங், லியு யி ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.