Published : 03 Apr 2018 09:03 PM
Last Updated : 03 Apr 2018 09:03 PM

அப்ரீடியின் காஷ்மீர் ‘கொதிப்பு’க்கு கவுதம் கம்பீரின் கடும் கலாய்ப்பு ட்வீட்

ஷாகித் அப்ரீடி மீண்டுமொரு முறை காஷ்மீர் பற்றி பேசி சமூக வலைத்தளவாசிகளின் ட்ரோல்களில் சிக்கிக் கொண்டார். கவுதம் கம்பீர் தன் பங்குக்கு அவரை கடுமையாகக் கிண்டல் செய்து பதில் ட்வீட் செய்துள்ளார்.

ஷாகித் அப்ரீடி “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்” என்றும் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை என்றும் விடுதலைக் குரலை நசுக்கும் அடக்குமுறை என்றும் ஐநா அதாவது UN உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? என்றும் தன் ட்விட்டரில் கொதிப்படைந்துள்ளார்.

இதற்குக் கவுதம் கம்பீர் தன் ட்விட்டர் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார்:

ஷாகித் அப்ரீடி ட்வீட் குறித்து ஊடகங்கள் என் எதிர்வினையைக் கோருகின்றன. என்னத்தைச் சொல்வது? அப்ரீடியின் குறைபாடுடைய அகராதியில் UN என்பது "UNDER NINTEEN" (his age bracket) என்பதாக அர்த்தமாகியிருக்கும். ஊடகங்கள் ரிலாக்ஸாக இருங்கள். நோ-பாலில் அவுட் ஆனதற்கு கொண்டாட்டம் போட்டவர்தானே அப்ரீடி.

என்று கடுமையாகக் கிண்டல் செய்து ட்வீட் செய்திருப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x