நிக்கோலஸ் பூரன் சிக்சர்ஸ் ஷோ - மும்பைக்கு 215 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

நிக்கோலஸ் பூரன் சிக்சர்ஸ் ஷோ - மும்பைக்கு 215 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்
Updated on
1 min read

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 214 ரன்களை சேர்த்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் ஓப்பனராக களமிறங்கிய தேவ்தட் படிக்கல் முதல் ஓவரில் டக்அவுட்டானார்.

மார்கஸ் ஸ்டோனிஸ் - கே.எல்.ராகுல் இணைந்து பொறுமையான ஆட்டத்தை கடைபிடிக்க, ஸ்டோனிஸ் 28 ரன்களில் எல்பிடபள்யூ ஆகி கிளம்பினார். அவரைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடா 11 ரன்களில் அவுட்டாக 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 69 ரன்களைச் சேர்த்திருந்தது.

நிக்கோலஸ் பூரன் சிக்சர்களை பறக்கவிட, கே.எல்.ராகுலும் தன் பங்குக்கு ரன்களைச் சேர்த்தார். 8 சிக்சர்களை விளாசிய பூரன், 29 பந்துகளில் 75 ரன்களைச் சேர்த்து மிரட்டினார். 16ஆவது ஓவரில் அவரை வெளியேற்றினார் நுவன் துஷாரா. அதே ஓவரில் அர்ஷத் கான் டக்அவுட். அதற்கு அடுத்த ஓவரில் ராகுல் 55 ரன்களில் விக்கெட்டானார்.

இறுதியில் க்ருணால் பாண்டியா - ஆயுஷ் படோனி கைகோத்து ரன்களை விரட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 214 ரன்களை குவித்தது. மும்பை அணி தரப்பில் நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in