Published : 12 Apr 2018 08:05 AM
Last Updated : 12 Apr 2018 08:05 AM

ராஜஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக தடைபட்டது.

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப் டன் கவுதம் காம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் இரு மாற்றங்கள் இருந்தது. அமித் மிஸ்ரா, டேனியல் கிறிஸ்டியன் ஆகியோருக்கு பதிலாக மேக்ஸ்வெல், சபாஷ் நதீம் ஆகி யோர் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. டி’ஆர்சி ஷார்ட் 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் டிரென்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். 28 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் ரஹானேவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். பவர்பிளேவில் 51 ரன்கள் சேர்க்கப்பட்டது.

சஞ்சு சாம்சன் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் நதீம் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 11 ஓவர்களில் 90 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் ரஹானே 40 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் நதீம் பந்தில், கிறிஸ் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன் கள் விளாசிய நிலையில் முகமது ஷமி பந்தில் போல்டானார். ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடை பட்டது. அப்போது ராகுல் திரிபாதி 15, கவுதம் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x