பாண்டியாவை விமர்சித்த ஏபிடி: “ரன் குவித்தது மட்டுமே உங்கள் சாதனை” - கம்பீர் பதிலடி

ஏபி டிவில்லியர்ஸ் | உள்படம்: கம்பீர்
ஏபி டிவில்லியர்ஸ் | உள்படம்: கம்பீர்
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா. இந்தச் சூழலில் கேப்டனாக அவரது செயல்பாட்டை ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் விமர்சித்திருந்தார். அதற்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் உண்மைத்தன்மை அறவே இல்லை. கொஞ்சம் ஈகோவும் கலந்துள்ளது என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி சொல்லி இருந்தார்.

இதே சீசனில் ஹர்திக்கின் கேப்டன்சி செயல்பாட்டை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் விமர்சித்திருந்தனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன்னும் ஹர்திக்கை விமர்சித்திருந்தார்.

இந்தச் சூழலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இயங்கி வரும் கவுதம் கம்பீர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். “அவர்கள் கேப்டனாக செயல்பட்ட போது அவர்களது பங்களிப்பு என்னவாக இருந்தது? கேப்டன்சி என்ற கண்ணோட்டத்தில் வைத்து பார்த்தால் பீட்டர்சன் மற்றும் டிவில்லியர்ஸின் செயல்திறன் சிறப்பானதாக இருந்ததில்லை. சொல்லிக் கொள்ளும் வகையிலான சாதனையை படைத்தது கிடையாது. மற்ற எல்லோரையும் விட அவர்களது சாதனை மோசமானதாகவே இருக்கும்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ் எந்த அணியையும் கேப்டனாக வழிநடத்தியது இல்லை. தனியொரு ஆளாக ரன் சேர்த்தது மட்டுமே அவரது சாதனை. அதை தாண்டி அவர் எந்த சாதனையையும் படைத்தது இல்லை. ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன். அதனால் ஆரஞ்சு பழத்தை அதோடுதான் ஒப்பிட முடியும், ஆப்பிள் பழத்தோடு ஒப்பிட முடியாது” என கம்பீர் சொல்லி இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in