

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்துள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனராக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட். அடுத்து கைகோத்த அபிஷேக் போரல் - ஷாய் ஹோப் அதிரடி காட்டினர். அபிஷேக் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 38 ரன்களில் அவுட்டானார்.
4 சிக்சர்களுடன் 53 ரன்களைச் சேர்த்த அபிஷேக்கை 12ஆவது ஓவரில் நவீன் உல் ஹக் அவுட்டாக்கினார். 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 136 ரன்களைச் சேர்த்திருந்தது.
ரிஷப் பந்த் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்ப டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். அவருடன் அக்சர் படேலும் துணை நிற்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 208 ரன்களை குவித்துள்ளது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களுடனும், அக்சர் படேல் 14 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், அர்ஷத் கான், ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.