

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது வலது முழங்கால் காயத்துக்காக வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். அவர் முழுமையாகக் குணமடைய 14 வாரங்கள் ஆகும் என தெரிகிறது.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டூவர்ட் பிராடின் முழங்கால் பகுதியில் பெரிய அளவில் அறுவை சிகிச்சை தேவைப்படுவதை எங்கள் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழு உறுதி செய்திருக்கிறது” என தெரிவித்துள்ளது.