

காமன்வெல்த் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற ராகி சர்னோபட்டுக்கு மகாராஷ்டிர அரசு துணை கலெக்டர் பதவி வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் ரூ.50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியை முடித்துக் கொண்டு சொந்த ஊரான மும்பைக்கு திரும்பிய சர்னோபட், செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநில ஆளுநர் கே.சங்கர நாராயணனை சந்தித்து ஆசி பெற்றார். அடுத்த மாதம் தென் கொரியாவில் நடக்க இருக்கும் ஆசிய போட்டியிலும் வெற்றிபெற அவருக்கு ஆளுநர் வாழ்த்துத் தெரிவித்தார்.
மாநில அரசு தனக்கு துணை கலெக்டர் பதவியை வழங்கியுள்ளதாகவும், புனேயில் புதன்கிழமை பதவி ஏற்க இருப்பதாகவும் அப்போது ராகி சர்னோபட் தெரிவித்தார்.
காமன்வெல்த்தில் தங்கம் வென்ற மகாராஷ்டிர வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.