இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட புஜாராவுக்கு பிசிசிஐ அனுமதி

இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட புஜாராவுக்கு பிசிசிஐ அனுமதி
Updated on
1 min read

இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆட இந்திய வீரர் புஜாராவுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

லெய்சஸ்டர் ஷயர் அணி புஜாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. மற்ற கவுண்ட்டி கிரிக்கெட் அணிகளும் புஜாராவை ஒப்பந்தம் செய்ய பேசி வருகின்றன.

புஜாரா தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் இல்லை என்பதால் அவரை விளையாட அனுமதி கொடுத்துள்ளதாக பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார்.

லெய்சஸ்டர் ஷயர் அணிக்கு அனில் கும்ளே, மற்றும் விரேந்திர சேவாக் இதற்கு முன்னர் விளையாடியுள்ளனர்.

ஐபிஎல். பணமழையிலிருந்து இந்திய வீரர்கள் வெளியே வரவேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கூறியிருந்தார். இதனையடுத்து புஜாரா இப்போது இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியில் விளையாடவிருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா 10 இன்னிங்ஸ்களில் 222 ரன்களையே எடுத்தார்.

லெய்சஸ்டர் ஷயரில் வசிக்கும் ஆசிய கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக புஜாராவை அங்கு விளையாட வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in