Published : 08 Apr 2018 09:43 AM
Last Updated : 08 Apr 2018 09:43 AM

‘பிராவோவுக்கு ஒரு விசில் போடு’ - வீரர்களின் சிஎஸ்கே வெற்றி உற்சாக ட்வீட்கள்

மும்பை இந்தியன்ஸ் கையில் இருந்த வெற்றிக்கனியை தனது அனாயச அதிரடி மூலம் பறித்து தோனி கையில் கொடுத்த டிவைன் பிராவோதான் இன்றைய talk of the town.

119/8 என்று சென்னை அதலபாதாளத்தில் இருந்த போது சகடை போட்டு இழுக்காமல் ஒரே இழுப்பில் தோல்விக்கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவந்தார் டிவைன் பிராவோ.

முதல் போட்டியில் சற்றும் எதிர்பாராத வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது, தோனியின் கேப்டன்சி என்பதை விட பிராவோவின் அதிரடி, அதிர்ஷ்டம் காரணம், மேலும் பும்ரா பந்தில் ஸ்டம்பில் பட்டு பைல்கள் விழாமல் இருந்ததே அது பெரிய விஷயம்.

இந்நிலையில் டிவைன் பிராவோவுக்கு விசில் போடு என்ற ரீதியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஹர்பஜன் சிங்: ஐபிஎல்-க்கு திரும்பிவிட்டது சிஎஸ்கே, அதுவும் எப்படி... கிரேட் கேம். பிராவோ யூ பியூட்டி.. ஆட்டத்தை முடிக்க டாப் ஷாட். விசில் போடு.

சுரேஷ் ரெய்னா: நாங்கள் வெளியில் செல்லவில்லை என்ற உணர்வை ஏற்படுத்தியது. என்ன மாதிரியான ஆட்டம், ஹேட்ஸ் ஆஃப் டு பிராவோ. நம்ப முடியாத இன்னிங்ஸ். ரசிகர்களுக்கு நன்றி, வான்கடே ரசிகர்கள் எங்கள் ஊரில் ஆடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தினர்.

ரஷித் கான்: வாட் அன் இன்னிங்ஸ் பிராவோ! பார்க்க அபாரமாக இருந்தது ப்ரோ!

சாம் பில்லிங்ஸ்: வாவ் பிராவோ, நம்ப முடியவில்லை. ஐபிஎல் திரும்பியது, வாட் எ வின்.

ஆல்பி மோர்கெல்: சென்னை அணி வெடிப்புடன் மீண்டும் திரும்பியுள்ளது

கிறிஸ் மோரிஸ்: எங்கிருந்தோ வந்து இது சீரியஸ் வின். பிராவோ பிரமாதம்

இயன் பிஷப்: மட்டை, பந்து வீச்சு இரண்டுமே பிராவோவுக்கு அற்புதம். உண்மையான சாம்பியன். தரநிலைகளை நிர்ணயம் செய்யுங்கள் பிராவோ, எதுவும் உண்மையில் முடிக்கப்படமால் முடிந்து விடுவதில்லை.

மைக் ஹஸ்ஸி: ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு என்ன மாதிரியான தொடக்கம். மீண்டும் வந்த சிஎஸ்கே-யை வரவேற்கிறேன்.

சுப்பிரமணியம் பத்ரிநாத்: பிரமாதமான சிக்ஸ் ஹிட்டிங் மூலம் விருந்தளித்தார் ப்ராவோ. 18வது 20வது ஓவரை சிக்கனமாக பிராவோ வீசியதையும் மறுக்க முடியாது.

மேத்யூ ஹெய்டன்: நம்ப முடியாத தொடக்கம். பிராவோ இன்னிங்ஸுக்குத் தலை வணங்குகிறேன்.

சேவாக்: பிராவோ ஒரு சாம்பியன், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு என்ன மாதிரியான ஒரு தொடக்கம்!

லஷ்மண்: கடைசி 18,20 வது ஓவரில் பிராவோ பிரமாதமாக வீசினார், பிறகு மகா அதிரடி. பின் தங்கியிருந்த நிலையிலிருந்து முயன்று பெற்ற வெற்றி. இதைவிட ஐபிஎல்க்கு சிறந்த தொடக்கம் இருக்க முடியாது.

ஆர்.பி.சிங்: நம்பமுடியாத அதிரடி பிராவோ! முதல் போட்டியை முழுதும் கொண்டாடினேன், வாழ்த்துக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x