100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆழ்வார்பேட்டை

இரு அணி கேப்டன்கள் | படம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
இரு அணி கேப்டன்கள் | படம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜாலி ரோவர்ஸ் - ஆழ்வார்பேட்டை அணிகள் மோதின. 3 நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் எஸ்எஸ்என் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஜாலி ரோவர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆழ்வார்பேட்டை அணியானது 40.3 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக என்.எஸ்.ஹரிஷ் 33 ரன்கள் சேர்த்தார்.

ஜாலி ரோவர்ஸ் அணி சார்பில் சந்திரசேகர் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். ராகுல் 3, சோனு யாதவ் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதன் பின்னர் விளையாடிய ஜாலி ரோவர்ஸ் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

விமல் குமார் 6, பாபா அபராஜித் 23, துருவ் ஷோரே 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அஜிதேஷ் 128 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், லக்சய் ஜெயின் 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in