KKR vs DC | டெல்லி கேபிடல்ஸை 7 விக்கெட்டுகளில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

கொல்கத்தா அணி வீரர்கள்
கொல்கத்தா அணி வீரர்கள்
Updated on
1 min read

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது அந்த அணி. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் பந்த் 27 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன் 1 விக்கெட் எடுத்தனர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரட்டியது. சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நரைன் 15 ரன்கள் மற்றும் சால்ட் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரையும் அக்சர் படேல் வெளியேற்றினார். ரிங்கு சிங்கை 11 ரன்களில் அவுட் செய்தார் வில்லியம்ஸ்.

ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இணைந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது கொல்கத்தா அணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in