Published : 11 Apr 2018 09:19 AM
Last Updated : 11 Apr 2018 09:19 AM
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி பாட் கம்மின்ஸை ரூ.5.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. மும்பையில் நடந்த முதல் போட்டியிலேயே பாட் கம்மின்ஸ் முதுகுவலி காரணமாக விளையாடவில்லை. இப்போது ஒட்டுமொத்தமாக தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். ஏற்கெனவே, ஐபிஎல் தொடரிலிருந்து ஸ்டார்க், நாதன் கோல்டர் நைல், ரபாடா, கேதார் ஜாதவ் ஆகியோர் விலகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT