

செயின்ட் ஜோசப்-ஸ்ரீராகவேந்திரா அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் பெங்களூர் எஸ்.பி.எம்.ஜெயின் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் வென்றது.
ஸ்ரீராகவேந்திரா கூடைப்பந்து கிளப் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் எஸ்.பி.எம். பல்கலை. அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. மகளிர் பிரிவில் எஸ்.பி.எம். பல்கலை. அணி, சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பரிசளிப்பு விழாவில் செயின்ட் ஜோசப் குழும நிர்வாக இயக்குநர் பாபு மனோகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை வழங்கினார்.